"பகவத் கீதையை புரிந்து கொண்ட பின்னர், ஒருவன் "நான் எனது வாழ்வை கிருஷ்ணரின் சேவைக்காக அர்ப்பணிப்பேன்" என்றவாறு நம்பிக்கையுடையவனானால், அவன் ஸ்ரீமத் பாகவதத்தின் கற்கைக்குள் புகுவதற்கு தகுதியுடையவன் ஆகிறான். அதன் அர்த்தம் என்னவென்றால் ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை முடியும் இடத்திலிருந்து துவங்குகிறது. பகவத் கீதை, ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ (BG 18.66) என்பதில் நிறைவுறுகிறது. மற்ற எல்லா ஈடுபாடுகளையும் விட்டுவிட்டு ஒருவன் கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைய வேண்டும். எப்பொழுதும் நினைவிற் கொள்ளுங்கள், மற்ற எல்லா ஈடுபாடுகள் என்றால் விட்டுவிடுவது அல்ல. புரிந்து கொள்ள முயலுங்கள், கிருஷ்ணர் கூறியுள்ளார் "எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னிடம் சரணடைவாயாக." அதன் அர்த்தம் அர்ஜுனன் தனது போரிடும் ஆற்றலை விட்டுவிட்டான் என்பது அல்ல. மாறாக, அவன் இன்னும் தீவிரமாக போரிட்டான்."
|