"கிருஷ்ணர் கூறுகிறார் அதாவது தம் அப்யர்ச்ய. நீங்கள் பரமபுருஷரை உங்கள் தொழிலின் கர்மபலனை கொண்டு வழிபடுங்கள். ஏனென்றால் அனைத்தும் கிருஷ்ணருக்கு தேவைப்படுகிறது. ஆகையால் நீங்கள் ஒரு குயவராக இருந்தால், மண் பானைகளை கொடுங்கள். நீங்கள் ஒரு தச்சராக இருந்தால், கோயிலுக்கு வேலை செய்யுங்கள். நீங்கள் ஒரு சலவையாளராக இருந்தால், பிறகு கோயிலின் துணிகளை துவைக்கவும். கோயில்தான் மையம், கிருஷ்ணர். மேலும் அனைவருக்கும் சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கும். ஆகையினால் கோயிலில் வணங்குவது மிகவும் சிறந்தது. ஆகவே இந்த கோயில் அதற்கேற்றப்படி ஏற்பாடு செய்யப்பட வேண்டும் அதாவது நமக்கு பணம் ஏதும் தேவைப்படாதபடை. நீங்கள் உங்கள் சேவையை அளியுங்கள். அவ்வளவுதான். உங்கள் சேவையில் ஈடுபடுங்கள். உங்கள் சேவையை மாற்றாதீர்கள். ஆனால் நீங்கள் கோயிலில் சேவை செய்ய முயற்சி செய்யுங்கள் என்பது பரமபுருஷருக்கு செய்வதாகும் - உங்கள் தொழில் சம்ந்தமான கடமை."
|