"வானில் மேகமூட்டம் நூறு மைல் வரை பரந்து இருக்கலாம், ஆனால் நூறு மைல்களால் கூட சூரியனை மூடிவிடுவது சாத்தியமா? சூரியன் இந்த பூமியை விட பலநூறு பல்லாயிரம் மடங்கு பெரியது. எனவே மாயை பரபிரம்மனை மூடிவிட முடியாது. மாயை பிரம்மனின் சிறிய துகள்களை மூடிவிட முடியும். எனவே நாம் மாயையால் அல்லது மேகத்தால் மூடப்படலாம். ஆனால் பரப்பிரம்மன் என்றும் மாயையால் மூடப்படுவதில்லை. இதுவே மாயாவாத தத்துவத்திற்கும் வைணவ தத்துவத்திற்கும் இடையிலுள்ள கருத்து வேறுபாடு. மாயாவாத தத்துவம் கூறுகிறது பரமன் மூடப்பட்டுள்ளார் என்று. பரமன் மூடப்பட முடியாதவர். இல்லையென்றால் எப்படி அவர் பரமனாக இருக்க முடியும்? மூடி பரமனாகிவிடும். ஓ, ஏகப்பட்ட வாதங்கள் இருக்கின்றன... ஆனால் நாம் பின்பற்றுவது, மேகம் சூரிய வெளிச்சத்தின் சிறு துகள்களை மூடும் என்பதை. ஆனால் சூரியன் அப்படியேதான் இருக்கிறது. மேலும் பிரத்யக்ஷமாக பார்க்கிறோம், விமானத்தில் செல்லும்போது, நாம் மேகமூட்டத்திற்கு மேல் செல்கிறோம் என்பதை. அங்கு மேகமூட்டம் இருப்பதில்லை. சூரியன் தெளிவாக இருக்கும். தாழ்ந்த தளத்தில் சில மேகமூட்டம் இருக்கவே செய்கிறது."
|