"பஹூனாம் ஜன்மனாம், பற்பல பிறவிகளுக்கு பிறகு, உண்மையான பக்தரை சந்திப்பதற்கு போதுமான அதிர்ஷ்டம் இருந்தால், அவன் ஞானத்தை அடைகிறான். வாஸுதேவ꞉ ஸர்வம் இதி (BG 7.19), பின்னர் அவன் வாசுதேவரை, கிருஷ்ணரை, எல்லாமாக ஏற்றுக்கொள்கிறான். ஸ மஹாத்மா ஸு-துர்லப꞉: 'அத்தகைய மகாத்மா மிகவும் அரிதானவன்.' மகாத்மா எனும் அந்த பதவியை ஹரே கிருஷ்ண உச்சாடனத்தின் மூலம் நேரடியாகப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இங்கு உள்ளது. எனவே இது மிகவும் விஞ்ஞான பூர்வமானது. இந்த இயக்கத்தை விஞ்ஞான பூர்வமாக, தத்துவ பூர்வமாக, நியாய பூர்வமாக புரிந்து கொள்வதற்கு விரும்பும் எவருக்கும் இந்த சூத்திரத்தை நாம் வழங்கலாம். இந்த இயக்கத்தில் இவற்றுக்கெல்லாம் எந்த பஞ்சமும் இல்லை."
|