"எங்கள் விளக்கக்காட்சி யாதெனில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள மணவாழ்க்கை செயற்கையானதல்ல. அது இயற்கையானதே, ஏனென்றால் அது பூரண உண்மையில் உள்ளது, நாம் வேதியல் விளக்கத்தில் காண்பது போல், அதாவது அந்த பூரண உண்மை, முழுமுதற் கடவுள், அன்பான மணவாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார், ராதா-கிருஷ்ணர். ஆனால் அதே ராதா-கிருஷ்ணா காதல் விஷயம் பல விவகாரமாக ஊடுருவுகிறது. ஆகையினால் அது வக்கிரமான பிரதிபலிப்பு. இந்த பௌதிக உலகில், அன்பு எனப்படுவது உண்மையான அன்பல்ல; அது காமம். இங்கு ஆணும் பெண்ணும் அன்பால் கவரப்படவில்லை காமத்தால் கவரப்படுகிறார்கள். ஆகையால் இந்த கிருஷ்ண உணர்வு இயக்கத்தில், நாம் பூரண உண்மையை அணுக முயற்சிப்பதால், அந்த காம நாட்டம் தூய அன்பாக மாற்றப்பட வேண்டும். அதுதான் முன்மொழிவு."
|