"எனது கருத்து என்னவென்றால், ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மனித சமூகத்திலும், ஒரு விசேட தகைமை இருக்கிறது. நேற்று முன்தினம் ஹரித்துவாரில் உள்ள ஒரு தேவாலயத்தில் காணப்பட்ட ஒரு படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். மில்லியன் கணக்கான மக்கள் கங்கையில் நீராடுவதற்காக அங்கு கூடியிருந்தனர். 1958இல் ஜெகன்நாத புரியில் ஒரு விசேஷமான திருவிழா நடந்தது. பஞ்சாங்கத்தில் எழுதப்பட்டிருந்தது, அக்குறிப்பிட்ட தினத்தில் யாராவது கடலில் நீராடிவிட்டு பகவான் ஜெகன்நாதர் தரிசனத்தை பெற்றால் அவர் முக்தி அடைவார் என்று. நானும் ஏனைய நண்பர்களுடன் அங்கு இருந்தேன். உங்களுக்கு தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள், ஒரு சில மணித்தியாலங்களுக்கேயான வருகைக்காக 6 மில்லியன் மக்கள் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்து கூடியிருந்தனர். மேலும் அரசாங்கமும் அவர்கள் கடலில் நீராடுவதற்கும் கோயிலுக்கு வருகை தரவும் விஷேச ஏற்பாடுகளை செய்யவேண்டியிருந்தது."
|