"கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கூறுகிறார், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ (BG 18.66): 'எனதன்பு அர்ஜுனா, ஏனைய எல்லா ஈடுபாடுகளையும் கைவிடுவாயாக. வெறுமனே எனது சேவையில் ஈடுபட்டிருப்பாயாக அல்லது எனது கட்டளைகளை நிறைவேற்றுவதில் ஈடுபட்டிருப்பாயாக.' 'பிறகு மற்ற விஷயங்கள் என்னவாகும்?' கிருஷ்ணர் உறுதி அளிக்கிறார், அஹம் த்வாம் ஸர்வ-பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி. யாராவது இப்படி நினைத்தால், 'நான் எல்லா மற்றைய ஈடுபாடுகளையும் கைவிட்டுவிட்டு வெறுமனே உங்களது சேவையில், உங்களது கட்டளைகளை நிறைவேற்றுவதில் ஈடுபட்டிருந்தால், எனது மற்றைய ஈடுபாடுகள் என்னவாகும்? எனக்கு ஏகப்பட்ட கடமைகள் உள்ளன. எனது குடும்பத்தின் விவகாரங்களில் ஈடுபட்டுள்ளேன், எனது சமூகத்தின் விவகாரங்களில் ஈடுபட்டுள்ளேன், எனது நாட்டின் விவகாரங்களில் ஈடுபட்டுள்ளேன், பற்பல விஷயங்களில்... பிறகு அவையெல்லாம் என்னவாகும்?' கிருஷ்ணர் கூறுகிறார் 'அதனை நான் பார்த்துக்கொள்கிறேன், எப்படி நீ அதை சரியாக செய்யலாம் என்று."
|