"ஆக எல்லோரும், அனைத்து மதமும், 'பகவான் தான் பெரியவர்,' என்று ஏற்றுக் கொள்கின்றனர் முழு சம்மதமான வரையறை. அதுதான் உண்மை. பகவான் பெரியவர் தான். மேலும் நாம் ஓர் அணு, மிகவும் சிறியது. பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது, மமைவாம்ʼஷோ ஜீவ-பூத꞉ (ப.கீ. 15.7). பகவான் கூறுகிறார், கிருஷ்ணர் கூறுகிறார், அதாவது 'அனைத்து ஜீவாத்மாக்களும், அவை அனைத்தும் என் அங்க உறுப்புகள்.' அங்க உறுப்புகள் என்றால்... நாம் மிகவும் சுலபமாக புரிந்துக் கொள்ளலாம். எவ்வாறு என்றால் இந்த விரல் நம் உடலின் ஒரு அங்க உறுப்பு. இதை எல்லோரும் புரிந்துக் கொள்ளலாம். ஆக நாம் பகவானின் அங்க உறுப்பு."
|