TA/680802b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே பகவானின் மற்றோரு பெயர் அதோக்ஷஜ, அதன் பொருள் நம் உணர்தலுக்கு அப்பாற்பட்டவர். உங்களால் பகவானை, நேரடியாக காண்பதன் மூலம், நேரடியான் வாசனை மூலம், நேரடியாக கேட்பதன் மூலம், நேரடியாக சுவைபதன் அல்லது தொடுவதன் மூலம் புரிந்துக் கொள்ள முடியாது. நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறி இருந்து, நம் பார்க்கும் சக்தி சரி செய்யப்பட்டு, நம் கேட்கும் சக்தி மாற்றியமைக்கப்பட்டால் தவிர, தற்போதைய தருணத்தில் அது சாத்தியமல்ல. இவ்விதமாக, நம் புலன்கள் சுத்திகரிக்கப்பட்டால், பிறகு நாம் பகவானைப் பற்றி கேட்கலாம், பார்க்கலாம், வாசனை பிடிக்கலாம், தொடலாம். அது சாத்தியமாகும். பகவானை எவ்வாறு பார்ப்பது, கேட்பது, உங்கள் புலன்களால் தொடுவது என்பதற்கு அந்த விஞ்ஞானத்தில் பயிற்சி பெற்றால், அது சாத்தியமாகும். அந்த விஞ்ஞானம் தான், பக்தி தொண்டு, அல்லது கிருஷ்ண உணர்வு என்று அழைக்கப்படுகிறது."
680802 - சொற்பொழிவு SB 01.02.05 - மாண்ட்ரீல்