"சைதன்ய-சரிதாம்ருதவில் அது கூறப்பட்டுள்ளது, குரு-க்ருʼஷ்ண க்ருʼபாய பாய பக்தி-லதா-பீஜ (சி.சி. மத்ய 19.151): கிருஷ்ணரின் மேலும் குருவின் இணைந்த கருணை இருக்க வேண்டும். பிறகு நம் கிருஷ்ண பக்தி இயக்கம் வெற்றிகரமாக இருக்கும். இதுதான் இரகசியம். கிருஷ்ணர் எப்போதும் நம்முளளெ இருக்கிறார். ஈஷ்வர꞉ ஸர்வ-பூதானாம்ʼ ஹ்ருʼத்-தேஷே அர்ஜுன திஷ்டதி (ப.கீ.18.61). ஆகையினால் உங்கள் நோக்கம் அனைத்தையும் கிருஷ்ணர் அறிவார், மேலும் நிங்கள் முடிவு செய்தது போல் வேலை செய்ய அவர் உங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறார். நீங்கள் இந்த பௌதிக உலகில் அனுபவிக்க முடிவு செய்தால், ஒரு சிறந்த தொழிலதிபராக, அரசியல்வாதியாக ஆக கிருஷ்ணர் உங்களுக்கு அறிவைக் கொடுப்பார், மிக சிறந்த தந்திரமானவனாக, நீங்கள் பணம் சம்பாதித்து புலன் இன்பத்தை அனுபவிக்கலாம். கிருஷ்ணர் உங்களுக்கு அறிவைக் கொடுப்பார்."
|