"ஹரே என்றால் கிருஷ்ணரின் சக்தியை குறிப்பது, மேலும் கிருஷ்ணர் பகவான் ஆவார். எனவே நாம் அழைக்கிறோம், 'ஓ கிருஷ்ணரின் சக்தி, ஓ கிருஷ்ணா, ராமா, ஓ நித்தியாமான அனுபவிப்பாலர், மேலும் ஹரே, அதே சக்தி, ஆன்மீக சக்தி.' நம் பிரார்த்தனை யாதெனில், 'தயவு செய்து உங்கள் தொண்டில் என்னை ஈடுபடுத்துங்கள்.' நாம் அனைவரும் பலவகையான தொண்டில் ஈடுபட்டிருக்கிறோம். அதைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நாம் துன்பப்படுகிறோம். மாயாவிற்கு தொண்டு செய்வதனால், நாம் துன்பப்படுகிறோம். மாயா என்றால் நாம் யாருக்கோ செய்யும் தொண்டு, அந்த நபர் திருப்தி அடையவில்லை; மெலும் நீங்களும் தொண்டு செய்கிறீர்கள் - நீங்கள் திருப்தி அடையவில்லை. உங்களிடம் அவனுக்கு திருப்தி இல்லை; அவனிடம் உங்களுக்கு திருப்தி இல்லை. இதைதான் மாயா என்றழைக்கிறோம்."
|