"பகவத் கீதையில் இரண்டு உணர்வுகளை பற்றிய விளக்கம் உள்ளது. எவ்வாறு என்றால் என் உடல் முழுவதும் உணர்வுள்ளது. நீங்கள் என் உடலின் எந்த பகுதியை கிள்ளினாலும், நான் அதை உணர்வேன். அதுதான் என்னுடைய உணர்வு. ஆக என் உணர்வு உடல் முழுவதும் பரவியுள்ளது. இது பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது, அவிநாஷி தத் வித்தி யேன ஸர்வம் இதம்ʼ ததம் (ப.கீ. 2.17): 'உடல் முழுமையும் பரவியுள்ள அந்த உணர்வு, அது நித்தியமானது.' மேலும் அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா꞉ ஷரீரிண (ப.கீ. 2.18): 'ஆனால் இந்த உடல் அந்தவத் ஆகும்' அதாவது அழியக் கூடியது. 'இந்த உடல் அழியக் கூடியது, ஆனால் அந்த ஆன்மா அழிவற்றது, நித்தியமானது.' "மேலும் அந்த உணர்வு அல்லது ஆன்மா, ஒரு உடலில் இருந்து மற்றோன்ருக்கு இடமாற்றமாகிறது. நாம் ஆடையை மாற்றுவது."
|