"எனவே இந்த பக்தி, கிருஷ்ணருக்கு செய்யும் பக்தி தொண்டு, மிகவும் அருமையானது. மேலும் அந்த பக்தி வகையில், இந்த ஜன்மாஷ்டமீ... நிச்சயமாக, இந்த ஜன்மாஷ்டமீ விழா அனைத்து இந்துக்களாலும் கவனிக்கப்படுகிறது. வைஷ்ணவர், வைஷ்ணர் அல்லாதவர் என்று பொருட்படுத்தாமல், இந்த விழா இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடப்படுகிறது. எவ்வாறு என்றால் உங்கள் மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துமஸ் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடப்படுவது போல், ஜன்மாஷ்டமீ ஒவ்வொரு வீட்டிலும் கவனிக்கப்படுகிறது. இன்று ஒரு சிறந்த விழா தினம். ஆகவே எங்கள் நிகழ்ச்சி, இரவு பன்னிரண்டு மணிக்கு நடக்கும், பகவான் பிறப்பெடுப்பார் மேலும் நாம் அவரை வரவேற்போம்."
|