TA/680817 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"அனைத்தும் பகவானைச் சேர்ந்தவை என்னும் கொள்கையை நமக்கு உணர்த்துவதற்காக, இதுதான் ஆரம்பம், அதாவது நம்மிடம் இருக்கும் எதுவாக இருந்தாலும் அதை காணிக்கையாக அளிக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். கிருஷ்ணர் உங்களிடமிருந்து சிறிது நீர், சிறிது மலர், சிறிது இலை அல்லது பழம் இவற்றை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார். நடைமுறையில் இதற்கு மதிப்பில்லை, ஆனால் நீங்கள் கிருஷ்ணருக்கு வழங்க தொடங்கியதும், பிறகு படிப்படியாக நீங்கள் கோபியர்களைப் போல், கிருஷ்ணருக்கு அனைத்தையும் அளிக்க தயாராகும் நேரம் வரும். இதுதான் அந்த செயல்முறை. ஸர்வாத்மனா. ஸர்வாத்மனா என்றால் அனைத்தையும். அதுதான் நம் இயற்கையான வாழ்க்கை. 'எதுவும் எனக்குச் சொந்தமில்லை. அனைத்தும் பகவானுக்கு சொந்தம், அனைத்தும் பகவானின் இன்பத்திற்கானது, என்னுடைய புலன் இன்பத்திற்கல்ல', என்னும் உணர்வில் நாம் இருந்தால், அதுதான் கிருஷ்ண உணர்வு என்று அழைக்கப்படுகிறது."
680817 - சொற்பொழிவு SB 07.09.11 - மாண்ட்ரீல்