"ஆன்மீக குரு என்றால் அவர் மேகத்தைப் போல் இருக்க வேண்டும். அது எவ்வாறு சாத்தியப்படும். இந்த வழியில் அது சாத்தியமாகும், அவர் ஆன்மீக குருவின், சீடர் பரம்பரையின் சங்கிலித் தொடரை பின்பற்ற வேண்டும். பிறகு அது சாத்தியமாகும். அவர் அந்த மரபுரிமை சக்தியை மேலான மூலத்திடமிருந்து பெற்றிருக்க வேண்டும். பிறகு அது சாத்தியமாகும் அதாவது அவரது கற்பித்தல், அவரது பாடங்கள் மூலம், நம் இதயத்தினுள் எரிந்துக் கொண்டிருக்கும் காட்டு தீயை அது அணைத்துவிடும், மேலும் அத்தகைய அங்கீகரிகப்பட்ட ஆன்மீக அறிவுரைகளை பெறுபவர்கள் திருப்தி அடைவார்கள்."
|