"அடுத்து நீங்கள் அனைவரும் ஆன்மீக குருவாக வேண்டும். மேலும் அதன் கடமை என்ன? என்னிடமிருந்து நீங்கள் கேட்பவை அனைத்தும், என்னிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளும் அனைத்தும், நீங்கள் அப்படியே முற்றிலும் எந்த மாற்றமும் இல்லாமல் விநியோகிக்க வேண்டும். பிறகு நீங்கள் அனைவரும் ஆன்மீக குருவாகிவிடுவீர்கள். அதுதான் ஆன்மீக குருவாகும் விஞ்ஞானம். ஆன்மீக குருவாவது ஒன்றும் அற்புதமான காரியமல்ல. ஒருவர் வெறுமனெ நேர்மையான ஆன்மாவாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். ஏவம்ʼ பரம்பரா-ப்ராப்தம் இமம்ʼ ராஜர்ஷயோ விது꞉ (ப.கீ. 4.2). பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது அதாவது ' சீடர் பரம்பரை சங்கிலித் தொடர் மூலம் பகவத் கீதையின் இந்த யோகா செயல்முறை ஒரு சீடரிடமிருந்து இன்னொருவருக்கு ஒப்படைக்கப்பட்டது'."
|