" கூட்டத்திற்கும், சொற்பொழிவிற்கும் எவரேனும் அழைத்தால், நாம் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆம். மேலும் அவர்கள் இலவசமாக கேட்க விரும்பினால், அவர்கள் நம் கோவிலுக்கு வரலாம். மட்டமாகாதீர்கள். நீங்கள் பார்த்தீர்களா? என் குரு மஹாராஜ் எப்போதும் சொல்வார் அதாவது போதர் கதர ஸேஇ உஸனே ந(?): 'ஒருவர் மிகவும் மலிவாக நடந்தால், பிறகு எவரும் அவர் சொல்வதைக் கேட்கமாட்டார்கள்.' குறிப்பாக இந்த நாட்டில். நீங்கள் இலவச பேச்சாளராக இருந்தால், பிறகு எவரும் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள். எனவே நாம் கட்டணம் வசூலிக்க வேண்டும். போஸ்டனில், இந்த சொற்பொழிவுகள் அனைத்தும் ஷத்ஸ்வருப ஏற்பாடு செய்தார், அவர்கள் நூறு டாலர், குறைந்தது ஐம்பது டாலர் செலுத்தினார்கள்."
|