"ஆகவே நீங்கள் இந்து, முஸ்லீம், கிறிஸ்தியன் அல்லது யாரேனுமாக இருந்தாலும் அது முக்கியமல்ல. அது முக்கியமல்ல. ஆனால் இந்த பிரபஞ்சத்தை கட்டுப்படுத்தும் ஒப்புயற்வற்றவர் ஒருவர் இருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். அதை எவ்வாறு உங்களால் மறுக்க இயலும்? ஆகவே இந்த வார்த்தைகள் சைதன்ய மஹாபிரபுவால் மிகவும் அழகாக உபயோகிக்கப்பட்டுள்ளது: ஜகதீஸ. ஜய ஜகதீஸ ஹரே. இது உலகளாவியது. இப்போது நீங்கள் 'என் தந்தை தான் ஜகதீஸ,' என்று நினைத்தால், அது உங்களுடைய நம்பிக்கை, ஆனால் ஜகதீஸ என்றால் ஒப்புயற்வற்றவர் - அங்கு கட்டுப்படுத்துபவர் இல்லை. எல்லோரும் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். ஒருவர் கட்டுப்படுத்தப்படுகிறார் என்று நீங்கள் பார்த்ததும், அவர் நித்தியமானவரல்ல."
|