"பகவானுக்கு தூய தெய்வத் தொண்டில் ஈடுபட்டிருக்கும் எவரேனும், எவ்வித ஒதுக்கீடும் இல்லாமல் - அவ்யபிசாரிணி, கலப்படமில்லாமல், வெறுமனே பகவனிடம் தூய அன்புடன், ஆனுகூல்யேன க்ருʼஷ்ணானுஷீலனம் (சி.சி. மத்ய 19.167), ஆதரவாக - பகவான் எவ்வாறு திருப்தி அடைவார். இந்த உணர்வுடன், ஒருவர் தெய்வத் தொண்டில் ஈடுபட்டால், மாம்ʼ ச வ்யபிசாரிணி பக்தி யோகேன ய꞉ ஸேவதே... இவ்விதமாக யாரேனும் ஈடுபட்டிருந்தால், பிறகு அவன் நிலைப்பாடு என்ன? ஸ குணான் ஸமதீத்யைதான் (ப.கீ 14.26). ஜட இயற்கையில் மூன்று விதமான குணங்கள் உள்ளன, அவை சத்வ, ரஜோ, மேலும் தமோ குணம், அவன் உடனடியாக கடந்துவிடுவான். ஸ குணான் ஸமதீத்யைதான் ப்ரஹ்ம-பூயாய கல்பதே. அவன் உடனடியாக ஆன்மீகமாக அடையாளம் காணப்படுவான். உடனடியாக. ஆகவே இந்த ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செயல்முறை, நாம் மிகவும் சிறப்பாக சொன்னால்... சிறப்பாக என்றால் நாம் ஒரு சிறந்த இசைக் கலைஞனாக அல்லது கலைஞானம் நிறைந்த பாடகராக இருக்க வேண்டும் என்று பொருளல்ல. இல்லை. மிக சிறப்பாக என்றால் உண்மையாக மேலும் மிகவும் கவனமாக ஆகும். இந்த செயல்முறை ஆக உயர்ந்த யோக முறையாகும். இந்த ஆழ்நிலை நித்திய அதிர்வு, நீங்கள் உங்கள் மனதை ஹரே கிருஷ்ணா அதிர்வில் கவனம் செலுத்தினால் பெறலாம்."
|