"கிருஷ்ணருக்காக தியாகம் செய்ய நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் அன்பின் அடையாளம். யத் கரோஷி யத் அஷ்னாஸி யஜ் ஜுஹோஷி (ப.கீ. 9.27). நீங்கள்... சாப்பிடும் பொழுது, நீங்கள் வெறுமனே முடிவு செய்தால் அதாவது ' கிருஷ்ணருக்கு வழங்கப்படாத எதையும் நான் சாப்பிடமாட்டேன்', பிறகு கிருஷ்ணர் புரிந்துக் கொள்வார், 'ஓ, இதோ ஒரு பக்தர்'. 'கிருஷ்ணரின் அழகைத் தவிர வேறு எதையும் நான் பார்க்கமாட்டேன்', கிருஷ்ணர் புரிந்துக் கொள்வார். 'ஹரே கிருஷ்ணா மேலும் கிருஷ்ணர் சம்மந்தபட்ட தலைப்பை தவிர வேறு எதையும் செவியால் கேட்கமாட்டேன்'. இவை அனைத்தும் அங்கு உள்ளது. இதற்கு நீங்கள் சிறந்த செல்வந்தராக, மிக அழகாக அல்லது மிகவும் கற்றறிந்தவராக இருக்க வேண்டியதில்லை. நீங்கள் முடிவு செய்ய வேண்டும் அதாவது 'கிருஷ்ணர் இல்லாமல் நான் இதை செய்யமாட்டேன். கிருஷ்ணர் இல்லாமல் நான் இதை செய்யமாட்டேன். கிருஷ்ணர் பக்தியற்ற எவருடனும் நான் நட்பு கொள்ளமாட்டேன். கிருஷ்ணரைப் பற்றி சொல்லாத எதைப் பற்றியும் நான் பேசமாட்டேன்'. 'கிருஷ்ணர் கோவிலைத் தவிர வேறு எங்கும் செல்லமாட்டேன். கிருஷ்ணர் வேலையைத் தவிர வேறு எதிலும் ஈடுபடமாட்டேன்'. இவ்விதமாக, உங்கள் செயல்களுக்கு பயிற்சி அளித்தால், பிறகு நீங்கள் கிருஷ்ணரை நேசிப்பீர்கள் மேலும் கிருஷ்ணர் கவரப்படுகிறார் - வெறுமனே உங்கள் மன உறுதியால். கிருஷ்ணருக்கு உங்களிடமிருந்து எதுவும் தேவையில்லை. நீங்கள் அவரை நேசிக்க முடிவு செய்திருக்கிறீர்களா என்று தெரிந்துக் கொள்ள விரும்புகிறார். அவ்வளவுதான்."
|