"எனவே பகவத் கீதை இறை விஞ்ஞானம் ஆகும். அனைத்திற்கும் புரிந்துக் கொள்ள விஞ்ஞான செயல்முறை இருக்கிறது. ஸ்ரீமத் பாகவதத்தில் அது சொல்லப்பட்டுள்ளது, ஜ்ஷானம்ʼ மே பரம-குஹ்யம்ʼ யத் விஜ்ஷான-ஸமன்விதம் (ஸ்ரீ.பா. 2.9.31). அறிவு, அல்லது இறை விஞ்ஞானம், மிகவும் இரகசியமானது. இந்த விஞ்ஞானம் சதாரணமான விஞ்ஞானம் அல்ல. இது மிகவும் இரகசியமானது. ஜ்ஷானம்ʼ மே பரம-குஹ்யம்ʼ யத் விஜ்ஷான-ஸமன்விதம். விஜ்ஷான என்றால்...வி என்றால் குறிப்பிட்ட. அது குறிப்பிட்ட அறிவு, மேலும் அது குறிப்பிட்ட செயல்முறையால் புரிந்துக் கொள்ளப்பட வேண்டும்."
|