"முதன்முதலாக, கிருஷ்ணரின் பக்தனாவதற்கு முயற்சி செய்யுங்கள். பிறகு பகவத் கீதை என்றால் என்ன என்பதை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் புலமையால் அல்லது யூகத்தால் அல்ல. பிறகு நீங்கள் பகவத் கீதையை புரிந்துக் கொள்ளவே முடியாது. பகவத் கீதையை புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால், பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள செயல்முறைகளின்படி புரிந்துக் கொள்ள வேண்டும், உங்கள் சொந்த யூகத்தால் அல்ல. இதுதான் புரிந்துக் கொள்ளும் செயல்முறை. பக்தோ அ'ஸி மே ஸகா சேதி (ப.கீ. 4.3). பக்தா என்றால்... பக்தா என்பவர் யார்? பக்தா என்றால் பகவானுடனான தன் நித்தியமான உறவை புத்துயிர் பெறச் செய்த ஒருவன்."
|