"சைதன்ய மகாபிரபு அனைத்து வசதிகளையும் கொண்டிருந்தார். அவர் கற்றறிந்தவராக, மிகவும் மரியாதைக்குரிய இளைஞனாக அவரது நாட்டில் இருந்தார்; அவர் தன்னைப் பின்பற்றுபவர்கள் ஏராளமானோரைக் கொண்டிருந்தார். ஒரு சம்பவத்தில் அவர் எவ்வளவு நேசிக்கப்பட்ட ஒரு தலைவராக இருந்தார் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். காஜி அவரது சங்கீர்த்தன இயக்கத்துக்கு சவால் விடுத்து முதன்முறையாக ஹரே கிருஷ்ண உச்சாடனம் செய்ய வேண்டாம் என்று அவரை எச்சரித்தார், அவர் அதனை பொருட்படுத்தாத போது, அவர் மிருதங்கங்கள் உடைக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார். எனவே சிப்பாய்கள் வந்து மிருதங்கங்களை உடைத்தனர். இந்த தகவல் பகவான் சைதன்யரிடம் கொண்டு செல்லப்பட்டவே, அவர் சிவில் ஒத்துழையாமைக்கு உத்தரவிட்டார். அவர்தான் இந்தியாவின் வரலாற்றில் முதன் முறையாக சிவில் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தவர்."
|