"ராதாராணி கிருஷ்ணரின் விரிவாக்கமாவார். கிருஷ்ணர் ஆற்றல்மிக்கவராவார், மேலும் ராதாராணி சக்தியாவார். சக்தியையும் ஆற்றலையும், உங்களால் பிரிக்க முடியாது. நெருப்பையும் வெப்பத்தையும் பிரிக்க முடியாது. எங்கெல்லாம் நெருப்பு இருக்கிறதோ அங்கே வெப்பம் இருக்கும், எங்கெல்லாம் வெப்பம் இருக்கிறதோ அங்கே நெருப்பு இருக்கும். அதேபோல், கிருஷ்ணர் இருக்கும் இடமெல்லாம் ராதை இருக்கிறார். மேலும் ராதை இருக்கும் இடமெல்லாம் கிருஷ்ணர் இருக்கிறார். அவர்கள் பிரிக்க முடியாதவர்கள். ஆனால் கிருஷ்ணர் அனுபவிக்கிறார். எனவே ஸ்வரூப தாமோதர கோஸ்வாமீ இந்த சிக்கலான ராதா கிருஷ்ண தத்துவத்தை ஒரு பதத்தில், மிக அழகான பதத்தில் விவரித்துள்ளார். ராதா க்ருʼஷ்ண-ப்ரணய-விக்ருʼதிர் ஹ்லாதினீ-ஷக்திர் அஸ்மாத் ஏகாத்மானாவ் அபி புவி புரா தேஹ-பேதம்ʼ கதௌ தௌ (சி.சி. அதி 1.5). எனவே ராதாவும் கிருஷ்ணரும் ஒரே நித்தியமானவர்கள், ஆனால் அனுபவிப்பதற்காக, அவர்கள் இருவராக பிரிந்தார்கள். மறுபடியும் பகவான் சைதன்ய மஹாபிரபு ஒருவராக இணைந்தார். சைதன்யாக்யம்ʼ ப்ரகடம் அதுனா. அந்த ஒன்று என்றால் கிருஷ்ணர் ராதையின் பரவசத்தில் இருப்பார். சிலநேரங்களில் கிருஷ்ணர் ராதையின் பரவசத்தில் இருப்பார். சிலநேரங்களில் ராதை கிருஷ்ணரின் பரவசத்தில் இருப்பார். இது நடந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இதன் முழு விஷயம் யாதெனில் ராதாவும் கிருஷ்ணரும் ஒருவரே, நித்தியமானவர்கள்."
|