"ஆகவே ஒரு பிரம்மச்சாரி திருமணம் செய்த பின்னர் அவர் ஒரு கிரகஸ்தர் அல்லது குடும்பஸ்தர், என்று அழைக்கப்படுகிறர். ஆனால் ஒரு பிரம்மச்சாரி வாழ்க்கைத் தொடக்கத்திலிருந்து ஜட இன்பத்தை துறப்பதற்கு பயிற்சி அளிக்கப்படுவதால், அவரால் சாதாரண மனிதனைப் போல் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடமுடியாது. சாதாரண மனிதனுக்கு குடும்ப வாழ்க்கையை, அல்லது பெண்களின் சகவாசத்தை வாழ்க்கையின் இறுதிவரை விட்டுக் கொடுக்க இயலாது. ஆனால் வேதமுறைப்படி, பெண்களின் சகவாசம் ஒரு குறிப்பிட்ட காலம்வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது, இளமை காலம்வரை, சிறந்த குழந்தைகளை பிறப்பிக்க மட்டுமே. ஏனென்றால் இருபத்து ஐந்து வயது முதல் ஐம்பது வயதுவரை, ஒருவரால் சிறந்த குழந்தைகளை பிறப்பிக்க முடியும்."
|