"பகவத் கீதையில் அது கூறப்பட்டுள்ளது, சாதுர்-வர்ண்யம்ʼ மயா ஸ்ருʼஷ்டம் (ப.கீ 4.13). இந்த நான்கு வகை பிரிவுகளும் வேறுபட்ட குணங்களுக்கு ஏற்ப அங்கு இருக்கிறது, மேலும் கிருஷ்ணர், அல்லது பகவான் கூறுகிறார், "அது என்னுடைய படைப்பு." ஆகையால் அவர் படைப்பில் எந்த விதிவிலக்கும் இருக்காது. எவ்வாறு என்றால் பகவானின் படைப்பு சூரியன் என்பது போல். ஒவ்வொரு நாட்டிலும் சூரியன் இருக்கிறது, சூரியன் இந்தியாவில் தான் தெரியும் என்பதல்ல. ஒவ்வொரு நாட்டிலும் சந்திரன் இருக்கிறது. அதேபோல், இந்த சாதிமுறை அனைத்து நாட்டிலும் இருக்கிறது, அனைத்து சமூகத்திலும், ஆனால் வேறுபட்ட பெயர்களால் அழைக்கப்படலாம்."
|