"ஒருவேளை உங்களுக்கு வானத்தைப் பற்றி ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் வானத்தின் மகத்துவத்தைப் பற்றி ஒரு திட்டவட்டமான யோசனை இல்லை, எனென்றால் உங்கள் அனுபவமும் அறிவும் புலன் உணர்தலால் சேகரிக்கப்பட்டுள்ளது. வானத்தில் புலன் உணர்தல் இல்லை. எவ்வாறு என்றால் நாம் இந்த அறையில் அமர்ந்திருப்பது போல். இந்த அறையில் வானம் இருக்கிற்து, ஆனால் நம்மால் வானத்தை புரிந்துக் கொள்ள முடியாது. ஆனால் நாம் இந்த மேஜையை புரிந்துக் கொள்ள முயன்றால், உடனடியாக புரியும், எனென்றால் மேஜையை, நான் தொட்டால், அதன் கடினத் தன்மையை நான் உணர்கிறேன்; அங்கே உணர்தல் இருக்கிற்து."
|