"கிருஷ்ண உணர்வுடைய ஒருவர் முட்டாளாக இருக்கக் கூடாது. இந்த பிரபஞ்சத்தின் கிரகங்கள் எப்படி மிதக்கின்றன, எப்படி மனித உடல் சுழல்கிறது, எத்தனை உயிரினங்கள் இருக்கின்றன, எப்படி அவை கூர்ப்படைகின்றன... போன்றவற்றிற்கு விளக்கம் சொல்ல கோரினால், இவை அனைத்தும் விஞ்ஞான அறிவு-பௌதிகவியல், தாவிரவியல், இரசாயனவியல், வானவியல், என அனைத்தும். அதனால் கிருஷ்ணர் கூறுகிறார், யஜ் ஜ்ஷாத்வா: இந்த கிருஷ்ண உணர்வு அறிவை புரிந்து கொண்டால், பிறகு தெரிந்து கொள்வதற்கு எதுவுமே இருக்காது. அதன் அர்த்தம் பூரண அறிவை பெற்றிருப்பீர்கள். அறிவின் பின்னால் நாம் அலைகிறோம், ஆனால் கிருஷ்ண உணர்வு பற்றிய அறிவு இருந்தால், கிருஷ்ணரை அறிந்திருந்தால், பின்னர் எல்லா அறிவும் அடக்கப்பட்டிருக்கும்."
|