"சரணடையாமல், கட்டுப்படுத்துபவரையும் அவரது சக்தியையும், அவர் எவ்வாறு கட்டுப்படுத்துகிறார் என்றும், அனைத்தையும் புரிந்துக் கொள்வது மிகவும் கடினம். துப்யாம்ʼ ப்ரபன்னாய அஷேஷத꞉ ஸமக்ரேண உபதேக்ஷ்யாமி. இதுதான் நிலைமை. பின்வரும் அத்தியாயங்களில் கிருஷ்ணர் கூறுவதை நீங்கள் காண்பீர்க்ள், நாஹம்ʼ ப்ரகாஷ꞉ ஸர்வஸ்ய (ப.கீ. 7.25). எவ்வாறு என்றால், நீங்கள் ஒரு கல்வி நிறுவத்தினுள் சென்று, அதன் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாவிட்டால், அந்த நிறுவனத்தில் அளிக்கப்படும் அறிவுத்திறனை நீங்கள் எவ்வாறு அனுகூலமாக்கிக் கொள்ள இயலும்?"
|