TA/680912b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே ஒரு நோய்வாய்ப்பட்டவன், ஒரு மருத்துவரிடம் சென்றான். அவன், ஒரு நாள்பட்ட நோயினால் துன்பப்படுகிறான். அதன் காரணம் அவனுக்கு தெரியும். மருத்துவர் கூறுகிறார் "நீ இதை செய்தாய், ஆகையினால் நீ துன்பப்படுகிறாய்." ஆனால் குணமடைந்தபின்னும் மறுபடியும் அதையே செய்கிறான். ஏன்? இதுதான் உண்மையான பிரச்சனை. அவன் ஏன் அவ்வாறு செய்கிறான்? அவன் பார்த்துவிட்டான், அவன் அனுபவித்தான். ஆகையினால் பரீக்ஷித் மஹாராஜ கூறுகிறார், க்வசின் நிவர்ததே அபத்ராத். இத்தகைய அனுபவத்தால், கேட்டல் மேலும் பார்த்தல் மூலம், சில நேரங்களில் அவன் தவிர்க்கிறான், அதாவது "இல்லை, நான் இக்காரியங்களைச் செய்யப் போவதில்லை. இது மிகவும் தொந்தரவானது. முன்பு நான் பல துன்பத்தை எதிர்கொண்டேன்." மேலும் க்வசிச் சரதி தத் புன꞉ மேலும் சில நேரங்களில் அவன் மறுபடியும் அதே தவற்றைச் செய்கிறான்."
680912 - சொற்பொழிவு SB 06.01.06-15 - சான் பிரான்சிஸ்கோ