"கிருஷ்ணரை நம்மால் சில பூக்கள், சில பழங்கள், சிறிது நீர் என்பவற்றை கொண்டு வழிபட முடியும், அவ்வளவுதான். அது எவ்வளவு உலகளாவியது! சில பூக்கள், சில பழங்கள், சிறிது நீர் என்பவை எந்தவொரு ஏழ்மையான மனிதனாலும் பெற்றுக் கொள்ளக்கூடியது. கிருஷ்ணரை வழிபட பல்லாயிரக் கணக்கான டாலர்களை உழைக்க வேண்டிய அவசியமில்லை. கிருஷ்ணர் ஏன் கேட்க வேண்டும், டாலர்களையும் லட்சக்கணக்கான ரூபாய்களையும் தரவேண்டி? இல்லை. அவர் தன்னுள் பூரணமானவர். அவருக்கு எல்லாம் இருக்கிறது, பூரணமாக. எனவே அவர் யாசகர் அன்று. ஆனால் அவர் ஒரு யாசகர். எந்த வகையில்? அவர் உங்கள் அன்பை யாசிக்கிறார்."
|