TA/680924 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சியாட்டில் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த பகவத் கீதை இந்தியாவிலிருக்கும் மனித சமுதாயத்தால் மட்டும் படிக்கப்படவில்லை, ஆனால் இந்தியாவிற்கு வெளியே, பன்னெடுங் காலத்திற்கு முன்பிருந்தே படிக்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக, எல்லாம் ஜடக் கலங்கத்தின் தொடர்பினால் சீரழிந்து போவது போல், மக்களும் பகவத்கீதைக்கு வெவ்வேறு வழிகளில் விளக்கமளிக்கத் தொடங்கினர். அதனால், ஐநூறு வருடங்களுக்கு முன்பு பகவான் சைதன்யர் தோன்றி, தனது சுய வழிகாட்டலின் கீழ், வங்காளத்தில் கிருஷ்ண உணர்வு இயக்கத்தைத் தொடங்கினார். அவரது அவதார ஸ்தலம் நவத்வீபம் என்று அறியப்படுகிறது. இப்பொழுது, ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த கிருஷ்ண உணர்வு செய்தியை உலகம் பூராகவும் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு நகரத்திலும் பரப்புவதற்காக அவர் கட்டளையிட்டுள்ளார். அது அவரது கட்டளையாகும்."
680924 - Recorded Interview - சியாட்டில்