"எந்தவிதமான மோதலும் இல்லை. மோதல், கடவுளற்ற, கடவுள் மீது நம்பிக்கையற்ற நபர்களுக்கிடையில் இருக்கிறது. மோதல் இருக்கிறது. கிழக்குக்கும் மேற்குக்கும் இடையில் மோதல் இல்லை; நாஸ்திகவாதிகளுக்கும் ஆஸ்திகவாதிகளுக்கும் இடையில்தான் மோதல் இருக்கிறது. நாம் கிருஷ்ண உணர்வை பிரச்சாரம் செய்கிறோம், கிறிஸ்தவ முறை, யூத முறையை இந்திய முறையால் பதிலீடு செய்ய முயல்கின்றோம் என்பதல்ல. அது நமது கொள்கை அல்ல. ஒருவிதத்தில், கிருஷ்ண உணர்வு இயக்கம் எல்லா மதங்களின் முதுகலை பட்டப்படிப்பாகும். மதத்தின் வழிமுறை யாது? கடவுளின் அதிகாரத்தை ஏற்பது."
|