"பகவான் சைதன்யர் கூறியதை, கிருஷ்ணர் கூறியதை சரியாக அதன்படியே பேசும் ஒருவர், அவர் தான் ஆன்மீக குரு. எவ்வாறு என்றால் ஒரு ஆசிரியர் 'நான் எம்.ஏ. தேர்ச்சி பெற்றுவிட்டேன்' என்று கூறுவது போல். அதற்கு என்ன ஆதாரம்? அவன் எம்.ஏ. பரீட்சையில் தேர்ச்சி பெற்றவன் போல் சரியாக பேசினால், பிறகு அவன் எம்.ஏ. தான். ஒரு மருத்துவ பயிற்சியாளர், மருத்துவ கல்லூரியில், மற்ற மருத்துவ பயிற்சியாளர்களால் அங்கீகரிக்கப்பட்டால், அவன் மருத்துவ பயிற்சியாளராவான். அதேபோல், யார் ஆன்மீக குரு என்று நீங்கள் சோதிக்க விரும்பினால், நீங்கள் ஆன்மீக குருவின் தரநிலையை பார்க்க வேண்டும், கிருஷ்ணரும் பகவான் சைதன்யரும் ஒருவரே. பகவான் ஏசு கிறிஸ்துவும், மேலும்... பகவான் புத்தர், இவர்களும் ஆன்மீக குருக்களே, ஆனால் அவர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் பேசினார்கள். அது வேறு விஷயம். ஆனால் யார் ஆன்மீக குரு என்று நீங்கள் தெரிந்துக் கொள்ள விரும்பினால், பிறகு நீங்கள் அவர் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவைப் போல் சரியாக பேசுகிறாரா என்று சோதிக்க வேண்டும்."
|