"துன்பம் எப்பொழுதும் இருக்கும். எல்லோரும் துன்பத்திலிருந்து விடுபட முயற்சிக்கிறார்கள், அதுதான் உண்மை. வாழ்வதற்கான முழு போராட்டமும், துன்பத்திலிருந்து வெளியேறுவதற்காகவே. யாரோ சொன்னார் அதாவது இந்த வழியில் நீ துன்பத்திலிருந்து வெளியேறலாம், யாரோ சொன்னார் அந்த வழியில் நீ துன்பத்திலிருந்து வெளியேறலாம் என்று. ஆக அங்கு விதிமுறை, நவின விஞ்ஞானிகளால், தத்துவவாதிகளால், நாத்திகர்களால், அல்லது தெய்வ நம்பிக்கையாளர்கள், அல்லது பலனளிக்கும் நடிகர்கள், இன்னும் பல, அங்கு இருப்பவர்களால் வழங்கப்படுகிறது. ஆனால் கிருஷ்ண பக்தி இயக்கத்தின்படி, நீங்கள் வெறுமனே உங்கள் உணர்வை மாற்றிக் கொண்டால் அனைத்து துன்பத்திலிருந்தும் வெளியேறலாம், அவ்வளவுதான். அதுதான் கிருஷ்ண உணர்வு. நான் உங்களுக்கு பல முறை கொடுத்த உதாராணம் போல்... நம்முடைய துன்பங்களுக்கு காரணம் அறிவு பற்றாக்குறையும், அறியாமையும் தான். அந்த அறிவை சிறந்த அதிகாரிகளின் சேர்க்கையால் நாம் அடையலாம்."
|