TA/680927b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சியாட்டில் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"அவன் யாருக்கும் சேவகன் இல்லை அல்லது வேறு ஏதாகிலும் இல்லை என்று இந்த கூட்டத்தில் யாரேனும் சொல்ல இயலுமா? அவன் நிச்சயமாக இருக்க வேண்டும், ஏனென்றால் அதுதான் அவனுடைய நிலைமையின் அமைப்பு. ஆனால் அதில் சிரமம் யாதெனில், நம்முடைய புலன்களுக்கு சேவை செய்வதால், நம் பிரச்சனைக்கு, துன்பத்திற்கு தீர்வு இல்லை. தற்சமயத்திற்கு, தனக்குத்தானே திருப்தி அடையலாம் அதாவது நான் இந்த போதைப் பொருளை எடுத்துக் கொண்டேன், இதன் போதையால் நான் நினைக்கலாம் அதாவது 'நான் யாருக்கும் சேவன் அல்ல. நான் சுதந்திரமானவன்', ஆனால் அது செயற்கையானது. அந்த பிரமை நீங்கியதும், அவன் மறுபடியும் சேவகன் என்பதை உணர்வான். மறுபடியும் சேவகன். ஆகவே இதுதான் நம் நிலைமை. ஆனால் இந்த போராட்டம் ஏன் அங்கிருக்கிறது? நான் சேவை செய்ய கட்டாயப் படுத்தப்படுகிறேன், ஆனால் நான் சேவை செய்ய விரும்பவில்லை. எவ்வாறு சரிசெய்வது? சரிசெய்யும் வழி கிருஷ்ண உணர்வாகும், அதாவது நீங்கள் கிருஷ்ணரின் சேவகன் ஆனால், பிறகு உங்களுடைய எஜமானன் ஆகும் ஆசை, அதே சமயம் விடுதலை பெறும் ஆசை, உடனடியாக சாதிக்கப்படுகிறது."
680927 - சொற்பொழிவு - சியாட்டில்