"புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். ஒரு தட்டச்சு இயந்திரம், ஒரு சிறிய திருகு, அது காணவில்லை என்றால், உங்கள் இயந்திரம் சரியாக வேலை செய்யாது. நீங்கள் ஒரு பழுதுபார்க்கும் கடைக்குச் சென்று, அவன் பத்து டாலர் கட்டணம் கேட்க, நீங்கள் உடனே கொடுப்பீர்கள். அந்த சிறிய திருகு, அது இயந்திரத்தைவிட்டு வெளியானதும், அதற்கு ஒன்றரைகாசு மதிப்புகூட இல்லை. அதேபோல், நாம் எல்லோரும் பரம புருஷனின் அங்க உறுப்புக்கள். நாம் பரம் புருஷனுடன் சேர்ந்து வேலை செய்தால், அதாவது கிருஷ்ண உணர்வில், அல்லது இறைபக்தியுடன் வேலை செய்தால், அதாவது 'நான் அங்க உறுப்பு...' எவ்வாறு என்றால் இந்த விரல் என் உடலின் உணர்வில் முழுமையாக வேலை செய்கிறது, சிறிது வலி ஏற்படும் பொழுதும் என்னால் உணர முடிகிறது. அதேபோல், நீங்கள் கிருஷ்ண உணர்வில இணைந்தால், நீங்கள் சாதாரண நிலையில் வாழ்ந்தால், உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். நிங்கள் கிருஷ்ண உணர்விலிருந்து பிரிந்ததும், அனைத்து பிரச்சனையும் அங்கிருக்கும். அனைத்து பிரச்சனையும் அங்கிருக்கும். எனவே, நாம் தினமும் இந்த வகுப்பில் பல உதாராணங்களை கூறியுள்ளோம். ஆகவே நாம் சந்தோஷமாகவும் மேலும் சாதாரண நிலையில் இருக்க வேண்டுமென்றால், நாம் இந்த கிருஷ்ண உணர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும்."
|