TA/681004 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சியாட்டில் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"க்ருʼஷ்ண-பக்தி-ரஸ-பாவிதா மதி꞉. மதி꞉ என்றால் அறிவுத்திறன் அல்லது மனநிலை, அதாவது 'நான் கிருஷ்ணருக்கு சேவை செய்வேன்' . 'இத்தகைய மனநிலையை எங்காவது கொள்முதல் செய்ய முடிந்தால், தயவுசெய்து உடனே கொள்முதல் செய்துவிடுங்கள்.' பிறகு அடுத்து கேள்வி யாதெனில், 'சரி, நான் கொள்முதல் செய்கிறேன். அதன் விலை என்ன? உங்களுக்கு தெரியுமா?' லௌல்யம், 'வெறுமனே உங்களுடைய ஆர்வம், அவ்வளவுதான்'. லௌல்யம் ஏகம்ʼ மூல்யம். 'அதை நான் பெற்றுக் கொள்கிறேன்.' இல்லை. ந ஜன்ம கோடிபிஸ் ஸுக்ருʼதிபிர் லப்யதே (சி.சி. மத்ய 8.70). இந்த ஆர்வம், கிருஷ்ணரை எவ்வாறு நேசிப்பது, இது பல பிறவிகளுக்குப் பிறகும் கிடைக்காது. எனவே, அத்தகைய கவலை உங்களுக்கு கடுகளவு இருந்தாலும், 'கிருஷ்ணருக்கு நான் எவ்வாறு சேவை செய்வது?' நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். ஒரு கடுகளவு மட்டுமே, லௌல்ய, இந்த கவலை, 'கிருஷ்ணருக்கு நான் எவ்வாறு சேவை செய்வது?' இது மிகவும் அருமையானது. பிறகு கிருஷ்ணர் உங்களுக்கு அறிவுத்திறனை கொடுப்பார்."
681004 - சொற்பொழிவு - சியாட்டில்