"தற்போது ஒருவர் கேட்கலாம், "நான் ஏன் இறை விஞ்ஞானத்தை பற்றிப் புரிந்து கொள்ள ஆர்வப்பட வேண்டும்?" ஏன் பல்வேறு பௌதிக விஷயங்களின் விஞ்ஞானத்தை புரிந்து கொள்ளக்கூடாது? ஏன் ஒருவர்..." இல்லை. இதுதான் தேவை. அதுவே வேதாந்தத்தின் உபதேசம்: அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஷாஸா. இதுதான் வாய்ப்பு. இந்த மனித வாழ்வுதான் பூரணத்தின் விஞ்ஞானத்தை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு. கடவுள் அல்லது பூரண உண்மை அல்லது பரமாத்மா என்று எப்படிக் கூறினாலும் ஒரே விஷயம்தான். ஆனால் இந்த வாழ்வு புரிந்துகொள்வதற்கானது. இந்த வாய்ப்பை தவறவிட்டால், நாம் எங்கு செல்கிறோம் என்று நமக்கு தெரியாது."
|