TA/681014b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சியாட்டில் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உங்கள் புலன்களை திருப்திப்படுத்த முயலும் வரை, அது பௌதிக வாழ்க்கையாகிறது. கிருஷ்ணரின் புலன்களை திருப்திப்படுத்த திரும்பியவுடன், அது ஆன்மீக வாழ்க்கையாகிறது. அது மிக எளிமையான விஷயம். திருத்திப்படுத்துவதற்கு பதிலாக... ஹ்ருʼஷீகேன ஹ்ருʼஷீகேஷ-சேவனம் (CC Madhya 19.170). அதுதான் பக்தி. உங்களுக்கு புலன்கள் உள்ளன. அதனை திருப்திப்படுத்தியாக வேண்டும். புலன்கள், புலன்கள் மூலம் திருப்திபடுத்த வேண்டும். உங்களையே நீங்கள் திருப்திப்படுத்தினாலும் சரி... ஆனால் உங்களுக்கு தெரிவதில்லை. கட்டுண்ட ஆத்மாக்களுக்கு, கிருஷ்ணரின் புலன்களை திருப்திப்படுத்துவதன் மூலம் தனது புலன்கள் தானாகவே திருப்தியடையும் என்பது தெரிவதில்லை. அதே உதாரணம்: வேருக்கு நீர் ஊற்றுவது போல்... அல்லது இந்த விரல்கள், எனது உடலின் பின்ன பகுதி, வயிற்றுக்கு உணவளிப்பதன் மூலம், விரல்கள் தானாகவே திருப்தியடையும். இந்த இரகசியத்தை நாம் தவற விடுகிறோம். நமது புலன்களை திருப்திப்படுத்த முயல்வதால் நாம் மகிழ்ச்சியடைவோம் என்று நினைக்கிறோம். கிருஷ்ண உணர்வு என்பது உங்கள் புலன்களை திருப்திப்படுத்த முயல வேண்டாம், கிருஷ்ணரின் புலன்களை திருத்திப்படுத்துங்கள்; உங்கள் புலன்கள் தானாகவே திருப்தியடையும். இதுவே கிருஷ்ண உணர்வின் இரகசியம்."
681014 - சொற்பொழிவு BG 02.19-25 - சியாட்டில்