"எவ்வாறு என்றால் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உங்களால் தொலைக்காட்சி படங்களை அல்லது வானொலி ஒலியை பரிமாற்றம் செய்ய முடிகிறது, அதேபோல், உங்களை நீங்களே தயார்படுத்திக் கொண்டால், பிறகு நீங்கள் கோவிந்தரை எந்நேரமும் காணலாம். அது கடினமானதல்ல. இது ப்ரஹ்ம-ஸம்ʼஹிதாவில் கூறப்பட்டுள்ளது, ப்ரேமாஷ்ஜன-ச்சுரித-பக்தி-விலோசனேன. நீங்கள் வெறுமனே உங்கள் கண்களை, மனத்தை, அவ்விதமாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் இதயத்தினுள் ஒரு தொலைக்காட்சி பெட்டி இருக்கிறது. இதுதான் யோகாவின் முழுமையான நிலை. நீங்கள் ஒரு இயந்திரம், அல்லது தொலைக்காட்சி பெட்டி கொள்முதல் செய்ய வெண்டும் என்பதல்ல. அது அங்கிருக்கிறது, மேலும் பகவானும் அங்கு இருக்கிறார். நீங்கள் பார்க்க இயலும், கேட்க முடியும், பேச முடியும், நிபந்தனைபடி நீங்கள் இயந்திரம் வைத்திருந்தால், நீங்கள் பழுதுபார்க்க வேண்டும், அவ்வளவுதான். பழுதுபார்க்கும் செயல்முறைதான் கிருஷ்ண உணர்வு."
|