"இந்த யுகத்தில் ஆயுட்காலம் மிகவும் நிச்சயமற்றது. எந்த கணத்திலும் நாம் இறக்கலாம். ஆனால் இந்த வாழ்வு, இந்த மனித வாழ்வு, ஒரு உயர்ந்த இலாபத்திற்கானது. அது என்ன? நமது வாழ்வின் துன்பகரமான நிலைக்கு ஒரு நிரந்தர தீர்வை காண்பது. இந்த... நாம் இந்த பௌதிக வடிவத்தில் இருக்கும் வரை, இந்த உடலினுள், ஓர் உடலிலிருந்து இன்னொரு உடலுக்கு, ஓர் உடலிலிருந்து இன்னொரு உடலுக்கு என மாறவேண்டும். ஜன்ம-ம்ருʼத்யு-ஜரா-வ்யாதி (BG 13.8-12). மீண்டும் பிறப்பு, மீண்டும் இறப்பு. ஆத்மா அழிவற்றது, நித்தியமானது, ஆனால் மாற்றுகிறது, உடையை மாற்றுவது போன்று. இந்தப் பிரச்சனையை அவர்கள் கருத்தில் கொள்வதில்லை. ஆனால் இது ஒரு பிரச்சனை."
|