TA/681021b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சியாட்டில் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
ஜய-கோபால: மாயாதேவி எந்த வகையான ஜீவாத்மா?
பிரபுபாதர்: அவள் வைஷ்ணவீ. அவள் கிருஷ்ணரின் சிறந்த பக்தை. ஆனால் அவள் நன்றியற்ற பணியை ஏற்றுக் கொண்டாள்: தண்டிப்பது. காவல்காரன் ஒரு நேர்மையான அரசாங்க சேவகன், ஆனால் அவன் ஒரு பணியை ஏற்றுக் கொண்டான், எவரும் அவனை விரும்பமாட்டார்கள். (சிரிப்பொலி) இங்கு சில காவலர்கள் வந்தால், உடனடியாக நீங்கள் தொந்தரவாக உணர்வீர்கள். ஆனால் அவன் ஒரு நேர்மையான அரசாங்க சேவகன். அதுதான் மாயாவின் நிலையும். அவள் வேலை இங்கு அனுபவிப்பதர்காக வந்திருக்கும் இந்த அயோக்கியர்களை தண்டிப்பதாகும். நீங்கள் பார்த்தீர்களா? ஆனால் அவள் பகவானின் நேர்மையான வேலைகாரி. ஜய-கோபால: இது ஒரு உத்தியோகம் போன்றதா? பிரபுபாதர்: ஆம். அது ஒரு உத்தியோகம், நன்றியற்ற உத்தியோகம். எவரும் நன்றி தெரிவிக்கமாட்டார்கள், கேலி செய்வார்கள். நீங்கள் பார்த்தீர்களா? ஆனால் அவள் ஒரு சிறந்த பக்தை. அவள் பொறுத்துக்கொண்டு மேலும் தண்டிப்பாள். அவ்வளவுதான். தைவீ ஹ்ய் ஏஷா குணமயீ மம மாயா துரத்யயா (ப.கீ. 7.14). அவள் எதிர்பார்பு யாதெனில் 'நீ கிருஷ்ண பக்தன் ஆனால், நான் உன்னை விட்டுவிடுவேன்', அவ்வளவுதான். காவலர்கள் வேலை யாதெனில் "நீ சட்டத்தை மதிக்கும் குடிமகனாக இருந்தால்; பிறகு உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை." |
681021 - சொற்பொழிவு SB 07.09.08 - சியாட்டில் |