"கலி-ஸந்தரன உபநிஷத்திலும் சொல்லப்பட்டுள்ளது, அதாவது இந்த 16 சொற்களால் மட்டுமே இந்த கலியுகத்தில், அனைத்து கட்டுண்ட ஆத்மாக்களையும் மாயாவின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியும். மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, இந்த யுகத்தில் முக்திநிலை பெற வேறு எந்த சிறந்த முறையும் இல்லை. இதுவே அனைத்து வேதத்திலும் இருக்கும் பதிப்பு. அதேபோல் மத்வாசார்ய முண்டக உபநிஷத்தில் அவருடை வர்ணனையில் மேற்கோள் காட்டியுள்ளார், அதாவது த்வாபர-யுகத்தில் பகவான் விஷ்ணுக்கு பஷ்சராத்ர என்னும் முறைப்படி வழிபாடு செய்யலாம். கலியுகத்தில் வெறுமனே பகவனின் புனித நாமத்தை உச்சாடனம் செய்து அவரை வழிபடலாம்."
|