"நம꞉, ந், அ, ம், அ, ஹ், என்னும் சொல் பின்வருமாறு விளக்கப்படலாம்: நா, என்றால் பொய்யான தற்பெருமை, மேலும் மா என்றால் ரத்து செய்வது. அப்படியென்றால் மந்திரத்தை பயிற்சி செய்வதன் மூலம் ஒருவர் பொய்யான தற்பெருமை நிலையிலிருந்து படிப்படியாக உயர்ந்து திவ்வியமான நிலையை அடைவார். பொய்யான தற்பெருமை நிலை என்றால் இந்த உடலை தான் என்று ஏற்றுக் கொண்டு, மேலும் உடல் சம்மந்தமாக பௌதிக உலகை மிகவும் முக்கியமானதாக ஏற்றுக் கொள்வது. இதுதான் பொய்யான தற்பெருமை. மந்திரத்தை குறைபாடில்லாமல் உச்சாடனம் செய்வதினால் இந்த பௌதிக உலகத்தின் எவ்விதமான பொய்யான அடையாளமும் இல்லாமல் ஒருவர் நித்தியமான தளத்திற்கு உயர முடியும்."
|