"குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் இருப்பது ஆன்மீக வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஒரு தகுதியின்மை அன்று. அது ஒரு தகுதியின்மை அன்று, ஏனென்றால் ஒருவர் தனது பிறப்பை தாய் தந்தையரிடம் இருந்துதான் பெற வேண்டியிருக்கிறது. எனவே எல்லா பெரும் ஆச்சாரியர்கள், பெரும் ஆன்மீக தலைவர்கள், அவர்களும் தாய் தந்தையரிடம் இருந்துதான் வந்தனர். எனவே தாய் தந்தையரின் கலப்பு இல்லாமல், ஒரு மகாத்மாவை பெறுவது கூட சாத்தியமில்லை. சங்கராச்சாரியார், இயேசு கிறிஸ்து, ராமானுஜாச்சாரியார் போன்ற மகாத்மாக்களின் பல உதாரணங்கள் உள்ளன. அவர்களுக்கு உயரிய பரம்பரை அந்தஸ்து கூட இருக்கவில்லை, இருந்தும், அவர்கள் கிருகஸ்தர்களிடமிருந்து, தாய் தந்தையரிடம் இருந்துதான் வந்தனர். எனவே, கிருகஸ்த அல்லது குடும்ப வாழ்வு ஒரு தகுதியின்மை அன்று."
|