"சுயநலம்... ஒரு நாயைப் போன்று. அதற்கு தனது உடலைப் பற்றி மட்டுமே தெரியும். தனது எல்லைக்குள் இன்னொரு நாயை அனுமதிக்காது. அது மிகவும் மோசமான சுயநலம். அதனை சிறிது விரிவுபடுத்தியதும், மனித சமுதாயம். குடும்பம், மனைவி, குழந்தைகள். அதுவும் விரிவுபடுத்தப்பட்ட சுயநலமே. அதனை மேலும் விரிவுபடுத்தவே: சமூகம் அல்லது தேசியம், தேசிய உணர்வு. அதுவும் மேலும் விரிவுபடுத்தப்பட்ட சுயநலமே. அதேபோல், அதே நாட்டத்தை மனிதநேயம் வாரியாக விரிவுபடுத்துகிறீர்கள். மனித சமுதாயத்திற்கு சேவை செய்ய ஆவலாகவுள்ள ஒரு பிரிவினர் உள்ளனர். ஆனால் அவர்கள் விலங்கு சமுதாயத்திற்கு சேவை செய்ய ஆவலாக இல்லை. மனித சமுதாயத்தின் திருப்திக்காக, வேண்டுமானால் விலங்கு சமுதாயம் கொல்லப்படலாம். அதனால், ஆத்மா எனும் தளத்திற்கு வராவிட்டால், எத்தகைய விரிவுபடுத்தப்பட்ட சுயநலமாக இருந்தாலும், அது சுயநலமே."
|