"மனத்தை சமநிலையில் வைப்பதற்காகவே தியானத்தின் செயல்முறை உதவுகிறது. அதுவே ஷம. மேலும் டம, டம என்றால் புலன்களை கட்டுப்படுத்துவதாகும். என்னுடைய புலன்கள் எப்பொழுதும் எனக்கு ஆணையிடுகிறது, 'ஒ, நீ இதை எடுத்துக் கொள். நீ இதை அனுபவி. நீ அதைச் செய். நீ அதைச் செய்'. மேலும் நான் அதனால் இயக்கப்படுகிறேன். நாம் அனைவரும் புலன்களின் வேலைக்காரர்கள். எனவே நாம் புலன்களின் வேலைக்காரர்கள் ஆகிவிட்டோம். நாம் பகவானின் வேலைக்காரர்களாக மாற வேண்டும், அவ்வளவுதான். அதுதான் கிருஷ்ண பக்தி. நீங்கள் ஏற்கனவே சேவகர்தான், ஆனால் நீங்கள் புலன்களின் சேவகர்கள், நீங்கள் ஆணையிடப்படுகிறீர்கள் மேலும் விரக்தியடைகிறீர்கள். நீங்கள் பகவானின் சேவகர்களாகுங்கள். நீங்கள் எஜமானராக முடியாது, அது உங்கள் நிலையல்ல. நீங்கள் சேவகனாக வேண்டும். நீங்கள் பகவானின் சேவகனாகவில்லை என்றால், பிறகு நீங்கள் புலன்களின் சேவகனாக வேண்டும். அதுதான் உங்கள் நிலைப்பாடு. ஆகையால், புத்திசாலிகள், புரிந்துக் கொள்வார்கள், அதாவது 'நான் ஒரு சேவகனாக இருக்க வேண்டுமென்றால், நான் ஏன் புலன்களின் சேவகனாக இருக்க வேண்டும்? ஏன் கிருஷ்ணரின் சேவகனாக இருக்க கூடாது? இதுதான் புத்திசாலித்தனம். இதுதான் புத்திசாலித்தனம். மேலும் புலன்களின் சேவகனாக இருக்கும் முட்டாள்கள், அவர்கள் தங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மிக்க நன்றி."
|