TA/681030 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த பௌதிக உலகில், நற்குணம் சில சமயங்களில் அறியாமை குணம் மற்றும் தீவிர குணத்துடன் கலக்கப்படுகிறது, ஆனால் ஆன்மீக உலகில் சுத்த ஸத்வ குணம் உள்ளது- தீவிர குணம் மற்றும் அறியாமை குணத்தின் மாசோ அல்லது சாயலோ கிடையாது. அதனால் அது சுத்த-ஸத்வம் என்று அழைக்கப்படுகிறது. சுத்த-ஸத்வம். ஷப்தம், ஸத்த்வம்ʼ விஷுத்தம்ʼ வஸுதேவ-ஷப்திதம் (SB 4.3.23): "அந்த சுத்த ஸத்வ குணம் வாசுதேவ என்று அழைக்கப்படுகிறது. மேலும் அந்த சுத்த ஸத்வ குணத்தில் கடவுளை உணர முடியும்." அதனால் கடவுளின் நாமம் வாசுதேவ, "வசுதேவரிலிருந்து தோன்றியவர்." வசுதேவர் வாசுதேவரின் தந்தையாவார். நாம் தீவிர குணம் மற்றும் அறியாமை குணத்தின் சாயல் ஏதும் இல்லாமல், சுத்த ஸத்வ குணத்தின் தளத்திற்கு வராவிட்டால், கடவுளை உணர்வது சாத்தியமில்லை."
681030 - சொற்பொழிவு ISO 1 - லாஸ் ஏஞ்சல்ஸ்