"பகவானின் வசிப்பிடம் சிந்தாமணி கற்களால் ஆனது. வீடுகள்... இந்த உலகில் நமக்கு அனுபவம் இருக்கிறது, வீடுகள் செங்கற்களால் ஆனவை, அதுபோல அங்கு, ஆன்மீக உலகத்தில் வீடுகள் சிந்தாமணி கற்களால் ஆனவை. சிந்தாமணி-ப்ரகர-ஸத்மஸு கல்ப-வ்ருʼக்ஷ (Bs. 5.29). அங்கு மரங்கள் உள்ளன, ஆனால் அம்மரங்கள் இந்த மரத்தைப் போன்றதல்ல. அம்மரங்கள் கல்ப விருட்சங்கள். இங்கு ஒரு விடயத்தை..., ஒரு வகையான பழத்தை ஒரு மரத்திலிருந்து பெறலாம், ஆனால் அங்கு மரங்களிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம், அதை பெருவீர்கள். ஏனென்றால் அம்மரங்கள் எல்லாம் ஆன்மீகமானவை. அதுவே ஜடத்துக்கும் ஆன்மீகத்திற்கும் இடையிலான வேறுபாடு."
|